சாவகச்சேரி-சங்கத்தானை விமான குண்டுவீச்சுப் படுகொலை. 28.9.1993

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

யாழ் நகரிலிருந்து கிழக்குப்புறமாக யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி நகர் அமைந்துள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியிலிருந்து 1/2 கிமீ தொலைவில் கண்டி வீதியின் கிழக்குப் பக்கமாக சங்கத்தானைக் கிராமம் அமைந்துள்ளது.


1990 இன் பின்னர் போர் தீவிரமடைந்தது. இதன்போது விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள், பொது இடங்களென எங்கும் தமது தாக்குதலை நடத்தின. அத்துடன், இராணுவத்தினர் நீண்டதூர எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இதன் விளைவாகப் பொதுமக்கள் தம்மை விமானத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பதுங்கு குழிகளை அமைத்து காப்பகழிகளாக பயன்படுத்தி வந்தனர்.

இக்கிராமத்தில் "உதயன் மரக்காலையில்" அமைந்திருந்த பதுங்குகுழி அயலில் வாழுகின்ற மக்களின் பாதுகாப்பரனாக இருந்தது. 28.09.1993 அன்று மாலை 5.00 மணியளவில் சாவகச்சேரி நகரப்பகுதியில் பெரும் இரைச்சலுடன் வந்த அர்ஜெண்டினா நாட்டுத் தயாரிப்பான
இரண்டு "புக்காரா" விமானங்கள் இரு தடவைகள் வானில் வட்டமிட்டன. பீதியுற்ற மக்களில் முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் தம்மைப் பாதுகாக்க உதயன் மரக்காலையில் அமைக்கப்பட்ட காப்பகழிக்குள் சென்றனர். இவ்விமானங்கள் வீசிய முதலாவது குண்டு காப்பகழி மீது வீழ்ந்து காப்பகழிக்குள்ளிருந்த இடத்தில் மண்ணுக்குள் வெடித்ததால், குழந்தைகள் உட்பட முப்பது பேர்வரை மண்ணுக்குள் புதைந்த நிலையில் உயிரிழந்தார்கள். காப்பகழியில் தஞ்சமடைந்த மக்களில் ஐந்துபேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் நினைவாக சாவகச்சேரி சங்கத்தானை "உதயன் மரக்காலையில்" நினைவுத்தூபி எழுப்பப்பட்டுள்ளது.
இப்படுபாதக செயலில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் :

01. இரத்தினகோபால் சுதர்சன்- 11
02. நாகேஸ்வரி குருநாதன் -56
03. கந்தையா செல்வராசா- 40
04. கணேசன் கௌசிகா- 12
05. பாலசுந்தரம் சந்திரசேகரம்-9
06. பாலசுந்தரம் சுரேஸ்-12
07. பாலசுந்தரம்- 3
08. தஸ்யனி பாலசுந்தரம்-2
09. தங்கம்மா கணபதிப்பிள்ளை -56
10. தங்கராசா சுசீலா- 21
11. மகேஸ்வரி செல்லையா -52
12. அமுதலிங்கம் லச்சம்மா -53
13. ஜெகதீஸ்வரன் ஜனனி -7
14. ஜெகதீஸ்வரன் தினேஸ்-8
15. ஜெகதீஸ்வரன் தசாஜினி-11
16. ஜெகதீஸ்வரன் சாந்தினி-31
17. கோபாலபிள்ளை சுதர்சன்-9
18. கோபாலரத்தினம் சுபாஜினி-15
19. பொன்னுத்துரை ஞானேஸ்வரி- 60
20. தெய்வேந்திரன் நாகேந்திரன்-19
21. செல்வராசா யசோதா-18
22. செல்வராசா சுஜாதா -16
23. சுரேக்கா கோபாலரட்ணம்-9
24. சின்னராசா நிறஞ்சனி-13
25. சின்னராசா பிரபா-10
26. சின்னராசா பிரபாலினி-10
27. சின்னராசா பவானி-21
28. இரத்னகோபால் துஸ்யேந்திரன்-09.

பவுத்த சிங்கள இனவாத சிறீலங்கா அரசின் தமிழினவழிப்பின் ஒரு பகுதியான சாவகச்சேரி-சங்காத்தானை விமானத்தாக்குதலில் படுகொலைச் செய்யப்பட்ட எமது தாய்த்தமிழ் உறவுகளை நினைவுகூறுவோம்.

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...