தேசியத் தலைவர்

உத்தரவுகளையும் கொடுப்பதற்கு முன்னம் தானே அதனை செய்து காட்டினார்.


இனிவரும் நூற்றாண்டுகளுக்கு அந்த தலைவனின் தத்துவங்களே தமிழினத்தின் வழித்தடம்.!


இந்த நேரத்தில் எத்தனை தடுத்தும் இந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது..தானாகவே வருகிறதோ என்னவோ..

இந்த சம்பவத்துடன் நேரடியாக நின்றவர்கள் இன்றும்கூட மெய்சிலிர்த்து சொல்லும் நிகழ்வு..


1987 ஒக்டோபர் மாத ஆரம்பம்.. குமரப்பா புலேந்தி மற்றும் போராளிகள் பலாலிமுகாமுள் தடுத்து வைக்கப்பட்டிருந்தநாட்கள். தமிழர்நிலம் எங்கும் ஒருவிதமான பதட்டமும் முதுகில் குத்தப்பட்டுவிட்டோம் என்ற பெரும் கோபமும் எழுந்தாடிய தருணமது.


குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் செய்தி வரும்போது தலைவர் முக்கியமான ஒரு சந்திப்புக்காக வல்வெட்டித்துறை ஊறணிக்கு பின்பாக இருந்த புளு பேஸ் க்கு போயிருந்தார்.


அங்கு நிற்கும்போதுதான் வீரமரணசெய்தி வந்தது.. தலைவர் உடனடியாக தனது வாகனத்தில் தனது இருப்பிடம் திரும்புகிறார். தலைவருடன் அவரது முக்கியமான பாதுகாவல் போராளிகளும் ஓரிரு முக்கிய போராளிகளுமே வாகனத்தில்..


தலைவரின் வாகனம் வல்வெட்டித்துறை நெடியகாட்டு பிள்ளையார் கோவிலை அண்மிக்கும்போது தலைவரின் வாகனத்தின் பின்பாக ஒரு சிங்களதேச காவல் ட்றக் வந்துகொண்டிருந்தது..

தலைவர் திடீரென வாகன சாரதிக்கு சொல்கிறார் பிரதான சாலையில் இருந்து முதலாவதாக வரும் ஏதாவது ஒழுங்கைக்குள் வாகனத்தை நிறுத்து என வல்வெட்டித்துறை நெடியகாடு சி.கு வீட்டுக்கு பக்கத்து ஒழுங்கையுள் வாகனம் வேகத்துடன் வந்து பிரேக் பிடித்து நிற்கிறது.. வாகனத்துள் இருந்தவர்கள் எவரும் எதிர்பாராத வேகத்தில் தலைவர் பக்கத்தில் இருந்தவரின் தன்னியக்க ரெபிளை (ஜி3) பறித்து வாகனத்தால் குதித்து பிரதான சாலைக்கு செல்லவும் சிறீலங்கா காவல்படை ட்றக் வரவும் சரியாக இருந்தது. ஒருகணம்கூட தாமததிக்காமல் அந்த ட்றக்கை நோக்கி தலைவர் சுடஆரம்பிக்கிறார்.அந்த வீதியில் தனியனாக எந்தவொரு மறைவும் இன்றி சுடுகிறார்.


நிலைமையின் தீவிரத்தை ஒரு கணத்தில் உணர்ந்த தலைவரின் வாகனத்துள் இருந்தவர்கள் இறங்கி ஓடிவரும்போது தலைவர் சுட்டு முடித்து நிற்கிறார். ஒரு பகல்பொழுதில் இது நிகழ்ந்தது..

தனது இனம் முதுகில் குத்தப்படுகிறது என்றுவரும்போது அந்த அதிமானுடன் எந்தவொரு உத்தரவுகளையும் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு முன்னம் தானே அதனை செய்து காட்டினார்.

சிறீலங்கா காவல்படை வண்டியில் இருப்பவர்கள் திரும்ப சுட்டால் தான் இறப்பேனே அல்லது காயமடைவேனே என்று அந்த தலைவன் நினைக்கவே இல்லை..

இனிவரும் நூற்றாண்டுகளுக்கு அந்த தலைவனின் தத்துவங்களே தமிழினத்தின் வழித்தடம்.!

-ச.ச.முத்து-


Leave A Comment