படைத்துறைகள்

கடற்புலிகளின் ஆழ்கடல் படகுப் பரிணாம்.

கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகமும் புதிய படகுப் பரிணாமமும்.


விடுதலைப் போராட்டத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடற்புலிகளின் நீண்ட கடலனுபவம் கொண்ட போராளிகள் தேசியத் தலைவர் அவர்களுக்கு  கொடுத்த தரவுகளின் அடிப்படையில். 


ஒரே தடவையில் பெருமளவான எரிபொருளை ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டு வருவதற்கானதும், 


அதே நேரம் கடற்படையின் ராடாரில் தெரியாதவாறுமான படகொன்றை உற்பத்தி செய்யுமாறு 2000ம் ஆண்டு நடுப்பகுதியில்  கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் தேசியத் தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டது.அதற்கமைவாக


இப்பணி கடற்புலிகளின் மேஜர்.மங்கை படகுக் கட்டுமானப்பிரிவிடம் (மகளீர்) ஒப்படைக்கப்பட்டது.


அதற்கமைவாக கடற்புலிகளின் படகு உற்பத்திக்கான ஆலோசகர்களின் ஆலோசனையுடன் மங்கை படகுக் கட்டுமான மகளீர் அணியினர் 2000ம் ஆண்டின் பிற்பகுதியில் இப்படகானது கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.


இப்படகின் பெயர் பழனியாகும் இப்படகானது ஒரு semi submarine (படகின் 95% கடல் மட்டத்திற்கு கீழாகவும் பயணிக்கக்கூடியது.) 


வடிவில் இரண்டு உள் இணைப்பு இயந்திரங்கள் மற்றும் நால்வர் அமரக்கூடிய cabin பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டது.ஒரே தடவையில் நாற்பதாயிரம் லீற்றர் எரிபொருளை கொண்டு வரக்கூடியது.அதேநேரம் கடற்படையின் ராடாரில் இரண்டு கடல்மைல் தூரம் தெரியக்கூடியதாகவுமிருந்தது.


கடற்புலிகளின் சாளை தளத்திலிருந்து 01.11.2000 அன்று மாலை பழனி தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்து கரையிலிருந்து உயர சுமார் நூற்றியிருபது கடல்மைல் தூரத்திலிருந்த விடுதலைப் புலிகளின் கப்பலிலிருந்து எரிபொருளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, 


சுமார் அறுபது கடல் மைலில் பழனிப்  படகின் ஒரு இயந்திரம் பழுதடைந்தது .


(இதன் நீண்ட பயண நேரம் பரிசோதிக்கப்பட்டிருந்தும் அன்றைய தினம் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்த காரணத்தால் படகின் ஒரு இயந்திரம் திடீரென பழுதடைந்து விட்டது.)


இருந்தாலும் கடற்புலிகளின் நீண்ட கடலனுபவம் கொண்டவரும் தலைசிறந்த டீசல் இயந்திரப் பொறியியலாலருமான சதீஸ் அவர்கள் மற்றும் வல்லவன் அவர்கள் பழுதான இயந்திரத்தை திருத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.


அதேசமயம் அக்கடற்பகுதியில் ஆழ்கடல்ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கலம் மற்றும் டோறாப்படகுகள்  ஏனைய விநியோக  படகுகளை இணங்கண்டு தாக்குதலைத் தொடர முற்பட்டபோது 


இவ் விநியோக படகுகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய கடற்புலிகளின் சண்டைப் படகுகளிற்க்கும் ஆழ்கடல் ரோந்துப் கப்பல் மற்றும் டோறாப் படகுகளிற்க்கும் ஒரு பாரிய சமர் மூண்டது.


சண்டையின் ஒரு கட்டத்தில் கடற்படையினர் பழனிப் படகினை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்க முயற்சித்தபோது கடற்புலிகளின் ஒரு தொகுதி சண்டைப்படகு கடற்படையுடன் போரிட, 


மற்ற தொகுதி சண்டைப்படகு பழனி படகிலுள்ளவர்களை மீட்டனர்.


இம் மீட்பு முயற்சியில் 

கடற்கரும்புலி மேஜர்.இலக்கியன்.

கடற்கரும்புலி மேஜர்.குமாரவேல்.


ஆகியோர்.இத்தொழில்நுட்பம் எதிரியிடம் பிடிபடக்கூடாது நாங்கள் இப்படகை எரிக்கிறம் என்று பழனியில் நின்று பழனியை எரித்து கடலிலே ஒரு சரித்திரத்தை எழுதினார்கள்.


சுமார் ஆறு மணித்தியாலங்கள் நீடித்த இவ் விநியோகப் பாதுகாப்பு சமரில் கடற்புலிகளின் ஆறு சண்டைப் படகுகள் இலங்கை கடற்படையின் பன்னிரண்டிற்க்கும்  மேற்பட்ட டோறாப் பீரங்கி படகுகளுடன் கடும் சமர் புரிந்தார்கள்.


இவ் வெற்றிகர விநியோக பாதுகாப்பு சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம் வருமாறு.


கடற்கரும்புலி லெப்.கேணல்.பெத்தா.


கடற்கரும்புலி  லெப்.கேணல்.சல்மான்.


கடற்கரும்புலி மேஜர்.குமாரவேல்.


கடற்கரும்புலி மேஐர்.இலக்கியன்.


கடற்கரும்புலி.மேஐர்.சதாசிவம்.


கடற்கரும்புலி கப்டன்.வல்லவன்.


கடற்புலி  லெப்.கேணல்.சதீஸ்.


கடற்புலி.மேஐர்.நிலவன்.


கடற்புலி.கப்டன்.குமார்.


இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.


அன்று இந்த நடவடிக்கையில் பெரும் பங்காற்றியவரின் உறுதுணையுடன்.


Leave A Comment