கடற்கரும்புலிகள்-04.05.1991

கப்டன் ஜெயந்தன்.

கப்டன் சிதம்பரம்.


 04.05.1991அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் அபித கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு.


கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும்.


யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் 04.05.1991    அன்று எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.


1988 – 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.


இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்  தாக்குதல்களால் சிறிலங்கா படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.


தென் தமிழீழம் ,  மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அவர்களின் பெயரில் தமிழீழ போரியல் வரலாற்றில் “ஜெயந்தன் படையணியாக” தடை எனும் பகை மோதி பல களங்களில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



லெப்.கேணல் தமிழவன் (புதியவன்)

04.05.2007அன்று திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment