கடற்கரும்புலிகள்-27.05.1997

விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்கள்.

கடற்கரும்புலி மேஜர் இளமகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் வீரவணக்க நாள் இன்றாகும்.

27.05.1997 அன்று கடற்புலிகளின் அணிகள் விநியோகத்தை முடித்துவிட்டு தளம் நோக்கித் திரும்புகையில் விநியோக அணியினர் மீது தாக்குதல் தொடுக்க சிறிலங்கா கடற்படையினர் எட்டு டோறா கலம் அடங்கிய கடற்கல அணி முயற்சித்த வேளை முல்லை மாவட்டம் கொக்கிளாய் கடற்பரப்பில் டோறாக் கலங்களை குறிவைத்துச் சென்ற கரும்புலிப் படகுகள் இயற்கை கடல் சீற்றத்தால் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் இன்மகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.​


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment