பார்வையில்

யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் - 06.03.1987

வெற்றிகரமாக தாக்கயழிக்கப்பட்ட யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல்

06.03.1987


யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . 


அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் .


அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன்,  


யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார்.


அதற்கமைவாக இம்மினிமகாமைதாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார் .


அதற்கமைவாக தாக்குலனிகள் 

06.03.1987 அன்று அதிகாலை யாழ்தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம்மீது தளபதி கிட்டண்ணா விளங்கப்படுத்திய தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் . 


குறிப்பிட்ட நிமிடத் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது .இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும் எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். 


மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.  இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.


இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். 


கிட்டண்ணாவிற்க்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார்.  


இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் . 


கப்டன்.  நிக்சன்.


2ம் லெப். அசோக்.


வீரவேங்கை.ரதன் 


ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.


Leave A Comment